×

மத்திய பஸ் நிலையத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணி துவக்கம்

ஊட்டி,அக்.12: ஊட்டி மத்திய பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக ஊட்டிக்கு வரும் பெரும்பாலான வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் தான் வருகின்றனர். அதேபோல், கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்கும் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டிக்கு வருகின்றனர். இவர்கள், அனைவரும் மத்திய பஸ் நிலையம் சென்று அங்கிருந்தே வெளியூர் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர். ஆனால், மத்திய பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த பஸ் நிலையம் சீரமைப்பு பணி  துவக்கப்பட்டது. முதற்கட்டமாக பஸ்கள் நிறுத்தும் இடம் பெயர்த்து போடப்பட்டது.

அங்கு இன்டர் லாக் கற்கள் பதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மத்திய பஸ் நிலையத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகம் துவக்கப்பட்டது. இதனால், மஞ்சூர் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் பஸ் நிலையம் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து வந்துசென்றன. அதேபோல், கோவை, ஈரோடு, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து இயக்கப்பட்டது. மத்திய பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருவது உள்ளூர் மக்கள் மற்றும் ஓட்டுநர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : bus station ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்