×

உலக தமிழ் கழக பொன்விழா

நாமக்கல், அக்.11: நாமக்கல்லில் உலக தமிழ் கழக பொன் விழா நடந்தது. நாமக்கல்லில், உலக தமிழ் கழகத்தின் பொன்விழா நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தனபாலன் தலைமை வகித்தார். நாமக்கல் கிளை தலைவர் சண்முகம் வரவேற்றார். விழாவில், உலக தமிழ் கழக தலைவர் கதிர் முத்தையன் பேசுகையில், ‘தமிழர்கள் அனைவரும் தமிழிலேயே பேசி, பிறமொழி கலப்பின்றி பேச வேண்டும். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டவேண்டும். நல்ல தமிழில் கடிதம், கட்டுரைகளை எழுதி பழக வேண்டும். உலக தமிழ் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மாநில அளவிலான மாநாடு விரைவில் நடத்தப்படும்,’ என்றார்.

விழாவில் தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், தேவநேயபாவாணர், பெருஞ்சித்திரனார், சின்னாண்டார், ராமலிங்கம் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டது. உலக தமிழ் கழக நெறியாளர் நெடுஞ்சேரலாதன், வடக்கு மண்டல பொறுப்பாளர் சக்கரபாணி, பொதுச்செயலாளர் தமிழாழன், ஓய்வு பெற்ற கல்லூரி கல்வி இயக்குனர் சேகர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனிசாமி, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உதயக்குமார், அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மதியழகன், செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : World Tamil Festival ,
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்