×

கோயில் நிலத்தில் மண் கொள்ளை

உடுமலை, செப். 26:  உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அசோகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வட்டாட்சியர்கள் தங்கவேல் (உடுமலை), கலாவதி (மடத்துக்குளம்) மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கடந்த 2015-16ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வரவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகளும் ஒட்டுமொத்தமாக தெரிவித்தனர். பிஏபி கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதிக்கு இதுவரை வரவில்லை. இடையில் குழாய் போட்டு உறிஞ்சுகின்றனர். இதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை என குற்றம்சாட்டினர்.பாலாற்று படுகையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. வேடப்பட்டி கோயில் நிலத்தில் 200 லோடு கிராவல் மண் முறைகேடாக அள்ளப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர்.இதற்கு பதிலளித்த  கோட்டாட்சியர் அசோகன், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், உரிய கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர்என்றார்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ- சேவை மையங்கள் அடிக்கடி செயல்படாமல் போகிறது. இதனால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்றனர்.
மக்காச்சோள பயிரின் தேவை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி அதிக விலைக்கு விதை விற்கின்றனர். போலி விதைகளும் உள்ளன. இதை தடுக்கவேண்டும். தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலும், மக்காச்சோளத்தில் சுருட்டு புழு தாக்குதலும் உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை