×

சாலையோர பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

பொள்ளாச்சி,செப்.26:  பொள்ளாச்சி பகுதியில், கிராமபுற சாலையோர பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
  பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில், 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. அவ்வப்போது சுகாதார பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு உள்ளதா என்று கடைகளில் ஆய்வு மேற்கொண்டாலும், தற்போது இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அதிலும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது வேதனையாக உள்ளது.  பிளாஸ்டிக் பை, பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் திறந்தவெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், வீடு மற்றும் வணிக வளாகம், கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே போட்டு செல்வதால் ரோட்டோரம் பிளாஸ்டிக் கழிவுகள் குவியலாக அதிகளவில் உள்ளன. குறிப்பாக வடக்கிபாளையம் பிரிவு, கோவைரோடு,  வால்பாறை ரோடு, பாலக்காடுரோடு, பல்லடம் ரோடு  உள்ளிட்ட பல இடங்களில் பிளாஸ்க் கழிவு பொருட்கள் சிதறிகிடப்பதை காணமுடிகிறது. ரோட்டோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு விளைவிப்பதுடன், அதனை கால்நடைகள் நுகர்ந்து செல்லும் அவலம் எற்பட்டுள்ளது. தமிழக அரசு வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், தற்போது பல்வேறு கிராமபுறங்களில் நாளுக்குநாள் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான பிளாஸ்டி பொருட்களை பயன்படுத்த தடைவிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை