×

நீரில் மூழ்கிய மாணவன் உடல் 5 நாட்களுக்கு பின் மீட்பு

சத்தியமங்கலம், செப். 21: கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மன்சூர். இவர் கடந்த 15ம் தேதி தனது உறவினர் மகனான அன்னூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ஆரிப் அகமது (14) என்பவரை அழைத்துக்கொண்டு பவானிசாகர் வந்து டணாய்க்கன்கோட்டை கோயில் அருகே குளிப்பதற்காக கீழ்பவானி வாய்க்காலில் இறங்கினார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் வாய்காலில் மூழ்கினர். இதையடுத்து   சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினரும், மீனவர்களும் இருவரையும் தேடிவந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் எரங்காட்டூர் வாய்க்கால் பாலம் அருகே, கீழ்பவானி வாய்க்காலில் மன்சூரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

 இந்நிலையில் ஆரிப் அகமதுவின் உடலை தேடி வந்த நிலையில், 5 நாட்களுக்கு பின்னர், நேற்று மதியம் தங்கநகரம் வாய்க்கால் பாலம் அருகே ஆரிப் அகமது உடல் கண்டெடுக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசி விற்ற வாலிபர் கைது திருப்பூர்,செப்.21: திருப்பூர்,  ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் கிலோ கணக்கில் ரேஷன் அரிசி வாங்கி அவற்றை மூட்டையாக கட்டி பைக்கில் எடுத்து சென்ற வாலிபர் ஒருவரை  அப்பகுதி பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின்  முரணாக பதில் கூறவே,அப்பகுதி மக்கள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதிகாரிகள் வந்து விசாரித்த போது, அரிசி கடத்தியவர் திருப்பூர் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த  பிரபு (26) என்பதும் பனியன் தொழிலாளியான இவர்  பொது மக்களிடம் ஒரு கிலோ ரேஷன் அரிசியை ரூ.3க்கு வாங்கி, கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள  வடமாநில இளைஞர்களுக்கு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்து வருவதாக  தெரிவித்தார். இதையடுத்து அவரிடமிருந்து நான்கு அரிசி மூட்டை அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை