×

கறம்பக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்ககோரி காலி குடங்களுடன் 2 கிராம பெண்கள் சாலை மறியல்

கறம்பக்குடி, செப். 21: கறம்பக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்ககோரி 2 கிராம ெபண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் அரியாண்டி, காஞ்சிரான்கொல்லை ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் சிறு மின் விசை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றின் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இவை பழுடைந்ததாலும், நீர் மட்டம் முற்றிலும் குறைந்து போனதன் காரணத்தினாலும் இப்பகுதி மக்கள் கடந்த குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதனை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்ககோரியும் நேற்று காலை 2 கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் காலி குடங்களுடன் அரியாண்டி, காஞ்சிரான்கொல்லை பேருந்து நிறுத்தங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மழையூர் காவல் துறையினர், தாசில்தார் சக்திவேலு மற்றும் கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாரத்திற்குள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது வரை காவிரி கூட்டு குடிநீரை பொது மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி, மழையூர் சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ