×

போயர் சமூகத்தினரை பழங்குடியின சீர்மரபினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,செப்.4: பெரம்பலூரில் மீண்டும் தங்களை பழங்குடியின சீர்மரபினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வீரபோயர் இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டர், போயர், பண்டி, கொட்டா எனப்படும் போயர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் டிஎன்டி எனப்படும் பழங்குடியின சீர்மரபினர் என அறிவிக்க கோரியும், எந்தவொரு பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாடு இல்லாமல் வாழ்ந்து வரும் போயர் இனத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாற்றியமைத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் போயர் சமூக கூட்டுறவு சங்கங்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தி பெரம்பலூர் புதுபஸ்டாண்டில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமை வகித்தார். வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநிலத்தலைவர் சிவசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் செல்வம் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சின்னதம்பி, நகர தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சின்னராசு உடனிருந்தார்.

Tags :
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய