×

முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார் துறைமங்கலம் ஏரி அருகே பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் விளை நிலத்தில் பாயும் அவலம்

பெரம்பலூர்,ஆக.14: துறைமங்கலம் ஏரிக்கு அருகேயுள்ள பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் விளை நிலங்களில் பாய்கிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைமங்கலம் ஏரி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். கூட்டத்தில், துறைமங்கலம் ஏரிப்பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள் அனைவரும், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களது குடியிருப்பிற்கு அருகிலுள்ள துறைமங்கலம் ஏரியிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறும் விளை நிலங்கள் உள்ளது. எங்கள் குடியிருப்பு அருகில் பாதாள சாக்கடை நீர் வெளியேற்றும் நிலையமும் உள்ளது. தற்போது, பாதாள சாக்கடை திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதன் கழிவுநீர் வெளியேறி அருகிலுள்ள பள்ளங்களில் நிரம்பி இருப்பதோடு, அவை பாசன வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்கு நேரடியாக செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர், விவசாய விளை நிலங்களை பாழ்படுத்துவது மட்டுமன்றி, நிலத்தடிநீர் ஆதாரத்தையும், வீணடித்து எங்களது குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளை மாசுப்படுத்தி, மிகவும் துர்நாற்றம் வீசுகின்ற நிலையில், சுற்றுப்புற சுகாதாரத்தையும் கெடுத்து வருகிறது. கழிவுநீர் பல்வேறு தொற்று கிருமிகளுடன், விஷக் கிருமிகளுடன் இருப்பதால் விவசாயிகளின் உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலும் காணப்படுகிறது. எனவே பாதாள சாக்கடை திட்ட குழாய் உடைப்பினை சம்மந்தப்பட்ட பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் விரைந்து சரிசெய்ய உத்தரவிடும்படி மாவட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் சாதனை