×

அரசு ஆரம்பப்பள்ளியில் அணு ஆயுத எதிர்ப்பு உறுதி மொழியேற்பு

கம்பம், ஆக. 14: கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பபள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் அணு ஆயுத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில்,  ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகாநாகி நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டன. ஹிரோஷிமா, நாகாநாகி துயரங்கள் நடந்த நினைவு தினங்களை போர்களுக்கு எதிரான தினங்களாக அனுசரித்து, அறிவியலை மனித வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அறிவியில் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற அணு ஆயுத எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சுந்தர், அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அழிவுகள் பற்றியும், அறிவியலை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பேசினார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் இருபால் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மகேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது