×

கலெக்டரிடம் தமுமுக மனு ஆனந்தூரில் அடிப்படை வசதிகள் ‘கட்’

ராமநாதபுரம், ஆக.14: ஆனந்தூர் தமுமுக சார்பில்  கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில், ‘‘ஆனந்தூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. பரமக்குடி ரோடு பருதுல்லா நகர், பச்சனத்திக்கோட்டை போன்ற பல பகுதிகளில் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதனை முறைப்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். மேலும் ஆனந்தூர் வழியாக பிற பகுதிகளுக்கு செல்லும் காவிரி குடிநீர் ஆனந்தூர் மக்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும். இதேபோல், ஆனந்தூருக்கு வரும் பஸ் அனைத்தும் மிகவும் பழைய மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி ரிப்பேராகி ரோட்டில் நின்று விடுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை.

காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரத்தில் வரும் பஸ்சை மாற்றி புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரில் எல்லா தெருக்களிலும் குப்பைகள், சாக்கடைகள் தேங்கி கிடக்கிறது. ஊராட்சி மற்ற அலுவலர்கள் முறையாக செயல்படாததால் தெருவில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கின்றன. தெருக்களில் நடந்து செல்ல முடியாத படி  துர்நாற்றம் அடிக்கிறது. சாக்கடை ரோட்டில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உருவாகி சுகாதார கேட்டை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு