×

மாவட்டம் செஞ்சிலுவை சங்கம் மூலம் கேரளாவிற்கு நிவாரண உதவிகளை அனுப்பலாம்

மதுரை, ஆக. 14: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் மதுரை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று சேர்மன் புகழகிரி தெரிவித்தார். கேரளாவில் பெய்து வரும் மழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து குடியிருக்க வழி இன்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ள பாதிப்புகளை கேரள முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சியினர் என்று பலர் பார்வையிட்டு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். நிவாரண தொகையாக மத்திய அரசு ரூ.100 கோடி வழங்கியுள்ளது. கூடுதலாக நிதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பொது நிறுவனத்தினர் நிவாரண தொகையை அரசுக்கு அனுப்பும் போது அது சரியாக சென்று அடையவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

இதனை தவிர்க்க செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுப்பினால் அந்த தொகை மற்றும் பொருட்கள் கலெக்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை செஞ்சிலுவை சங்க சேர்மன் புகழகிரி கூறும்போது, ‘‘கேரளாவில் ெவள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் மீட்பு பணி மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை செய்யலாம். காசோலையாக அனுப்ப நினைப்பவர்கள் “செஞ்சிலுவை சங்கம் மதுரை” என்ற முகவரில் எடுத்து அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு சங்க செயலாளர் கோபால கிருஷ்ணனை- 82200-01604 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

Tags :
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி