×

சாணார்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை கன ஜோர் மாணவர்களும் விற்பதாக பகீர் புகார்

கோபால்பட்டி, ஆக. 14: சாணார்பட்டி ஒன்றியப்பகுதிகளில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை படுஜோராய் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தவசிமடை, அஞ்சுகுழிப்பட்டி, செட்டிப்பட்டி, வேம்பார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இவற்றில் அரசுக்கு தெரியாமல் தனியார் தோட்டங்களில் கஞ்சா வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் தேனி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கஞ்சா அதிகளவு கொண்டு வரப்பட்டு, தவசிமடை, கோபால்பட்டி பகுதிகளில் மாணவர்கள் உட்பட பலருக்கு கஞ்சா அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, போலீசார் கஞ்சா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாணார்பட்டியை சேர்ந்த சரவணன் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் 25 வயதை தாண்டியவர்கள், வயதானவர்கள் மட்டுமே கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தனர். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இதுகுறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதகிளில் தற்போது தாராளமாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது’’ என்றார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்