×

இரை தேடி வந்து இறக்கும் தேசிய பறவை

வேடசந்தூர், ஆக. 14: வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் வனவிலங்குகள் மற்றும் தேசிய பறவையான மயில்கள் அதிகம் உள்ளன. கடந்த சில நாட்களாக போதிய மழையின்றி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தண்ணீர் மற்றும் இரை தேடி ஏராளமான மயில்கள் மலைப்பகுதிகளில் இருந்து சாலைக்கு வருகின்றன. இவகைள் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. நேற்று முன்தினம் வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் ஒரு பெண் மயில், வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதால், மயில்களை காப்பாற்ற வனத்துறையினர் உரிய நடவடிவக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

65% பணியாளர்கள் பற்றாக்குறை
கால்நடை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மண்டலங்களில் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் - 57, பழநி - 28, கொடைக்கானல் - 18 என 3 மண்டலங்களில் மொத்தம் 103 அரசு கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. திண்டுக்கல் தலைமை கால்நடை மருத்துவமனையில் சுமார் 130 எண்ணிக்கையில் கால்நடைகள், விலங்குகள், பறவைகள் என பல தரப்பிலும் உடனடி சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஸ்கேன், எக்ஸ்ரே, தடுப்பூசிகள், ஊட்டச்சத்து, அறுவை போன்ற சிகிச்சைகள் தரப்படுகின்றன. இதுபோலவே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு கால்நடைகள் மருத்துவமனைகளும் உள்ளன.

சுமார் 65 சதவீத அளவுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். சமூக ஆர்வலர் ஹைருல்லா கூறுகையில், ‘‘கால்நடை மருத்துவமனைகள் பழுதடைந்து, டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன.
இச்சம்பவங்களால், கால்நடைகள் விலங்குகள் பறவைகள் போன்றவைகள் உரிய நேரத்தில் சிகிச்சை வசதிகளின்றி போவதால் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. மருத்துவமனைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், டாக்டர்கள் மற்றும் பணியாளர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்