×

கட்சி பேதமின்றி மரியாதை சோகத்தில் மூழ்கிய மாவட்டம் அனைத்துக் கட்சியினர் மவுன அஞ்சலி

விருதுநகர், ஆக. 9: தலைவர் கலைஞர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக தலைமையில் அரசியல் கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மௌன அஞ்சலி ஊர்வலங்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், விருதுநகர் சூலக்கரையில் அனைத்து கட்சி சார்பில் நாகராஜ் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகரில் திமுக நகரச் செயலாளர் தனபால் தலைமையில் ஊர்வலம் அரிசி கடை மைதானம் துவங்கி தேசபந்து மைதானம் வரை நடைபெற்றது. குல்லூர்சந்தையில் ஒன்றியச் செயலாளர் பாண்டி தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி அண்ணாசிலையில் இருந்து சிவன்கோவில் வரை முன்னாள் கவுன்சிலர் முத்தலிப் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. எம்.புதுப்பட்டியில் ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. மல்லாங்கிணரில் நகரச் செயலாளர் முருகேசன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. கல்லுகுறிச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணாபுரத்தில் ராஜதுரை தலைமையிலும், தேவதானத்தில் பஸ் நிறுத்தம் முதல் நான்குரத வீதி வழியாக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. முத்துசாமியாபுரம் பஸ்நிறுத்தம் முதல் கலையரங்கம் வரை ஊராட்சிச் செயலர் சபரிமலை தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. தாயில்பட்டி முதல் டி.ராமலிங்காபுரம் வரை ஒன்றியச் செயலாளர் சந்தானம் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை பஸ்நிறுத்தம் முதல் ஆர்டிஓ அலுவலம் வரை முன்னாள் ஒன்றியச் செயலாளர் சங்கரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. ஏழாயிரம்பண்ணை தேவர் சிலை முதல் பழைய ஏழாயிரம் பண்ணை வரை மாவட்ட நிர்வாகி கணேசன் தலைமையில்  ஊர்வலம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் முதல் தேரடி பஸ் நிறுத்தம் வரை நகர செயலாளர் அய்யாவு தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. வன்னியம்பட்டி கொத்தன்குளம் முதல் வைத்தியலிங்கபுரம் ரயில்வே கேட் வரை மௌன ஊர்வலம் நகர செயலாளர் சேதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மல்லி பஜாரில் இளைஞர் அணி ராஜ்குமார் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் முதல் அக்ராஹரம் தெரு வரை நகர தலைவர் குமார் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. மாவூத்து ஜங்ஷன் முதல் மகாரஜபுரம் ஜங்ஷன் வரை கிளை செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. கூமாபட்டி பஸ் நிறுத்தம் முதல் அம்பேத்கார் சிலை வரை நகர செயலாளர் கார்நேஷ்வரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. திருச்சுழி போஸ் கம்பளக்ஸ் முதல் டிஸ்கோ ஹோட்டல் வரை நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. நரிக்குடி ஒன்றிய அலுவலகம் முதல் பஸ் நிறுத்தம் வரை பக்ரூதின் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. எம்.ரெட்டியபட்டி பஜார் முதல் ஒத்தக்கடை வரை ஒன்றிய மீனவர்அணி செயலர் சிவகுமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.ஏ.முக்குளத்தில் புல்வாய்கரை முதல் நேத்தியாயிருப்பு வரை ஒன்றிய செயலாளர்  குமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றதுபரளச்சி முதல் மேலையூர் வரை செயலாளர் சுந்தரநாயகம் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

Tags :
× RELATED திருச்சுழி அருகே வைக்கோல் படப்பில் தீ பிடித்தது