×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

சத்தியமங்கலம், ஆக. 7: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப்பணி நேற்று தொடங்கியது.
சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி 6 மாதத்திற்கு  ஒருமுறை நடைபெறுவது வழக்கம். நேற்று துவங்கிய இந்த கணக்கெடுப்பு பணியில்  சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டங்களில் உள்ள சத்தியமங்கலம்,  பவானிசாகர், டி.என்.பாளையம், ஆசனூர், கேர்மாளம் மற்றும் தாளவாடி  வனச்சரகங்களில் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இப்பணியில்  ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின்போது யானை, புலி, சிறுத்தை  உள்ளிட்ட அனைத்து வகை வனவிலங்குகளின், கால்தடம், எச்சம், வனவிலங்குகள்  நடமாடும் பகுதியில் உள்ள தாவரங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யும் பணி  நடைபெற்றது. தற்போதைய கணக்கெடுப்பு பணியில் எம் ஸ்டிரப் எனப்படும்  வனத்துறையின் பிரத்யேக மொபைல் செயலியில் கணக்கெடுப்பு விபரங்கள் பதிவு  செய்யப்படுவதால், கணக்கெடுப்பு விபரங்கள் உடனடியாக சென்னையில் உள்ள  வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து விடும்.  இதற்கென  ஒவ்வொரு காவல் சுற்றிற்கும் ஒரு ஆண்ட்ராய்ட் செல்போன் வனத்துறை மூலம்  வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் 3  நாட்கள் மாமிச உண்ணி கணக்கெடுப்பும், 3 நாட்களுக்கு கணக்கீடு செய்யும் பணியும் நடக்க உள்ளது. இந்த பணிகள்  முடிவுற்றபின் படிவங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரங்கள்  உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுப்பி  வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை