×

ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஈத்தாமொழி, ஜூன் 21 : ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். எரியாத தெருவிளக்குகளை எரியச்செய்ய வேண்டும். தேவையான இடங்களில் புதிய விளக்குகளை பொருத்த வேண்டும். குண்டும் குழியுமான ஊராட்சி சாலைகளை செப்பனிட வேண்டும். திறந்தவெளி கழிவு நீரோடைகளை மூடி பராமரிக்க வேண்டும். கழிவுநீர் வழிந்தோட வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் தேங்காவண்ணம் கால்வாய்களை தூர்வார வேண்டும். தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் பழவிளையில் உள்ள ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  

 ஒன்றியக்குழு செயலாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாரக்குழு உறுப்பினர்கள் பெருமாள், சாகுல்அமீது, மீன்பிடி தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் செல்லசாமி முடித்து வைத்து பேசினார்.

Tags :
× RELATED கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்