×

காலாவதியை கண்டு பிடிக்க

ஒவ்வொரு காஸ் சிலிண்டர் கைப்பிடி பகுதியின் மூன்று இரும்புப் பட்டிகளில் ஒன்றில் உள்புறம் காலாவதி தேதி இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மராமத்து செய்ய இந்த தேதி எழுதப்படுகிறது. இதன்படி ஓராண்டை தலா 3 மாதங்கள் என நான்காக பிரித்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு குறியீடு தரப்படுகிறது. ஏ-(ஜன. முதல் மார்ச் வரை), பி-(ஏப். முதல் ஜூன் வரை), சி-(ஜூலை முதல் செப்டம்பர் வரை), டி-(அக். முதல் டிசம்பர் வரை) என பிரிக்கப்படுகிறது. இந்த ஆங்கில எழுத்துடன் கலாவதியாகும் ஆண்டின் கடைசி இரு இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு ‘சி-18’ என்றால் இந்த சிலிண்டரின் காலாவதி தேதி ‘செப்டம்பர் மாதம் 2018ம் ஆண்டு’. இதுவே ‘ஏ-17’ எனக் கொண்டால் ‘மார்ச் மாதம் 2017ம் ஆண்டு’ காலாவதியானது என்பதை அறியலாம். இப்படி ஏதும் காலாவதி இருப்பினும் மக்கள் தெரிவிக்கலாம். காஸ் விநியோக முறைகேடுகளைக் களைவதிலும், விபத்துகள் குறித்த விழிப்புணர்விலும் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்