×

அதிகாரிகள் சமரசம் ஆண்டிமடத்தில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் கடந்த சில காலமாக வீடு, கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமை வகித்து பேசுகையில், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றால் தங்களது பெயர், முகவரியை தவறாமல் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். வங்கி லாக்கரில் வீட்டில் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பணத்தை வைக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் நடமாட்டம் இருந்தால் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் காற்றுக்காக கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து கொண்டு துங்கக்கூடாது. வீட்டில் பீரோ சாவி, வீட்டு சாவியை மற்றவர் கண்ணில் படும்படி வைக்கக்கூடாது. வீடு, கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார்.
அப்போது ஆண்டிமடம் கடைவீதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே உரிய இடத்தில் பேருந்துகளை நிறுத்தி செல்ல வேண்டுமென வணிகர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED லால்குடியில் அஸ்வின்ஸ் புதிய கிளை திறப்பு