×

அரியலூரில் 2வது நாளாக ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூன் 13: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், 21 மாத கால நிலுவை பணப்பயனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று 2வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன், முத்து, ஜாக்டோ நிர்வாகி வேலுமணி தலைமை வகித்து கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மீன்சுருட்டியில்விநாயகர் கோயிலில் உண்டியல்  கொள்ளை
ஜெயங்கொண்டம், ஜூன்13: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மீன்சுருட்டியில் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்து, அருகில் உள்ள அடகுகடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி கடைவீதியில் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரியாக ராமசாமி என்பவர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமசாமி நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலை வந்து கோயிலை திறந்தபோது தரையில் புதைக்கப்பட்ட உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த உண்டியலானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்து எடுக்கப்பட்டது.இந்நிலையில் உண்டியல் உடைத்த கொள்ளையர்களுக்கு அதிகம் பணம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இதனால் கோயில் அருகில் உள்ள அடகு மற்றும் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதில் முதல் கேட்டில் இருந்த மூன்று பூட்டுகளை உடைத்து கதவை திறந்துள்ளனர். அதற்கு அடுத்துள்ள கேட்டில் ஐந்து பூட்டுகள் இருந்தது. அதை உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் திரும்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்