×

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை அமுல் கந்தசாமி(அதிமுக) பேசுகையில் “தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சார வழங்கப்படுமா” என்றார். இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கடந்த 2016-17ம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் தாட்கோ, ஜீவன்தரா திட்டங்களின் கீழ் ஒரு மின் இணைப்பு கூட வழங்கவில்லை.

அதன் பின்னர் திமுக ஆட்சி பொறுப்பற்ற பின்னர் ஒரே ஆண்டில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த முன்னுரிமை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

Tags : Minister ,Senthil Balaji , Underprivileged and hilly people have been given electricity connection on priority basis in Rs 23 crore allocation: Minister Senthil Balaji Information
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...