×

ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது கோவிலில் பற்றிய தீ: அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய பக்தர்கள்

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் தீப்பற்றியதால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். ஸ்ரீராம நவமி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் தனுகு மண்டலத்தில் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஸ்ரீராம நவமிக்கான பூஜையையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக பனை ஓலையை கொண்டு கோயில் முழுவதும் நிழற்பந்துகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் ஸ்ரீராம நவமிக்கான பூஜைகள் நடைபெற்று இருந்தது. அப்போது திடீரென மின்கசிவு காரணமாக நிழற்பந்தளுக்காக போடப்பட்டு இருந்த பனை ஓலையில் தீப்பிடித்தது. இதனை அணைப்பதற்காக அங்கிருந்த பக்தர்கள், கோயில் நிர்வாகிகளும் முயற்சி செய்தனர். ஆனால், தீயை அணைக்க முடிய சூழல் நிலவியதால் அனைத்து பக்தர்களும் கோயிலை விட்டு அலறித்துக்கொண்டு வெளியேறினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.


Tags : Sriram ,Navami , Sri Rama, Navami, Celebration, Temple, Fire, Devotees
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...