×

ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAIக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்.!

சென்னை: ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும், அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது (Dahi) தஹி என இந்தியில் அச்சிட  FSSAI அறிவுறுத்தியும் இருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி‘ என இந்தியில் எழுத அறிவுறுத்திய ஒன்றிய அரசு நிறுவனமான FSSAI-க்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் ” எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’#இந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியில் ‘தஹி’ என அச்சிட இயலாது என தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Twitter ,Dahi ,Aavin , Chief Minister M. K. Stalin on Twitter condemned FSSAI for printing the Hindi name Dahi in Aavin's yogurt.
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...