×

சில்லி பாயின்ட்...

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய டி வில்லியர்ஸ், கிறிஸ் கேல் இருவரும் ‘ஆர்சிபி ஹால் ஆப் பேம்’ பிரபலங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்கள் அணிந்த ஜெர்சி எண்களை வேறு யாருக்கும் கொடுக்காமல் ‘ஓய்வு’ அளிக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு டி வில்லியர்ஸ், கிறிஸ் கேல் இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

* பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ், எதிர்வரும் சீசனில் கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன் குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வருவதால், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* கொலம்பியா - ஜப்பான் அணிகளிடையே ஒசாகாவில் நேற்று நடந்த நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில், கொலம்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.

* மைசூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்திய வீரர் சித்தார்த் ராவத் தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் டாலி பிளாங்க்குடன் நேற்று மோதிய ராவத் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

* செப்டம்பரில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனல்ஸ் தொடரின் ஒரு பிரிவுக்கான ஆட்டங்கள், மான்செஸ்டரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.




Tags : Silly Point...
× RELATED ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்