×

ஸ்காட்லாந்து பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி

லண்டன்: ஸ்காட்லாந்து புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் ஸ்காட்டிஸ் தேசிய கட்சி ஆட்சி நடக்கிறது. 2014ம் ஆண்டில் இருந்து அங்கு பிரதமராக நிக்கோலா ஸ்டர்ஜன் இருந்தார். அவர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய கூட்டம் நடந்தது.

இதில் நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும், நிதியமைச்சராக இருக்கும் கேட் போர்ப்சுக்கும் இடையே போட்டி நடந்தது. இதில் ஹம்சா யூசுப் வெற்றி பெற்றுள்ளார். விரைவில் அவர் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

Tags : Scotland , Pakistan-born Prime Minister of Scotland
× RELATED ஈரானில் 12வது நாளாக தீவிரமடையும்...