×

சில்லி பாயின்ட்...

* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர், ஹோல்கர் ஸ்டேடிய ஆடுகளம் ‘மோசமானதாக’ அறிவிக்கப்பட்டு 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த வாசிம் அக்ரம், ரோஜர் ஹார்ப்பர் ஆகியோர் அடங்கிய ஐசிசி குழு, இந்தூர் ஆடுகளத்தை ‘சராசரிக்கு கீழ்’ என அறிவித்துள்ளது. இதனால் இந்தூர் மைதானத்துக்கு 3 தரக்குறைவு புள்ளிகளுக்கு பதிலாக 1 புள்ளி மட்டுமே வழங்கப்படும்.

* ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் நித்திஷ் ராணா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2018ல் இருந்து கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் இவர், சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக 12 போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.

* பாகிஸ்தான் அணியுடன் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆப்கானிஸ்தான் அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. பாகிஸ்தான் 20 ஓவரில் 130/6 (இமத் வாசிம் 64*, கேப்டன் ஷதாப் கான் 32); ஆப்கானிஸ்தான் 19.5 ஓவரில் 133/3 (ரகமதுல்லா குர்பாஸ் 44, இப்ராகிம் ஸத்ரன் 38, நஜிபுல்லா 23*, முகமது நபி 14*). 


Tags : Silly Point...
× RELATED ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்