×

கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் கிழக்கு பகுதியில் நேற்று குழி தோண்டப்பட்டது. அப்போது, பழங்கால உறைகிணறு போன்ற அமைப்பு தென்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இடத்தை பார்வையிட்ட வருவாய்த்துறையினர், யாரும் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக முள் வைத்து மூடினர். இந்த உறைகிணறு குறித்து கீழடியில் உள்ள தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடிக்கு அருகில் உள்ள பகுதி என்பதால், திருப்பாச்சேத்தியிலும் பழங்கால தமிழர் நாகரிகம் நீண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.



Tags : Discovery of an ancient frozen well in Tirupuvanam area near Keezadi
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...