×

ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேரை, போலீசார் கைது செய்தனர். காசிமேடு சிங்காரவேலர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ரவுடி சஞ்சய் (எ) சாய்ரா (22). இவர், மீது காசிமேடு காவல் நிலையத்தில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ரவுடி சஞ்சய், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் வசித்து வரும், அக்கா கவுசல்யா  விட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த 2 பேர், சஞ்சயை வழிமறித்து, கத்தியால் தலையில் வெட்டிவிட்டு தப்பினர். தகவலறிந்த காசிமேடு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சஞ்சையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ரவுடியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய, அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (19), தீபத் (21) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டியதும், கைதான பிரதீப், தீபத் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் அடிதடி, வழிபறி, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 2 பேரை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : 2 arrested for cutting the rowdy with a sickle
× RELATED சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை