×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்: சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய தாழவேடு ஊராட்சி தும்பிகுளம் இருளர் காலனியில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம்  நடந்தது. இதற்கு திமுக மாவட்ட பிரதிநிதி தும்பிகுளம் பூக்கடை கோபி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா கோபி வரவேற்று பேசினார். இதில், திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட இருளர் இன பெண்களுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், லட்சுமி குமாரவேலன், காஞ்சிபாடி சரவணன், நாபலூர் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி. பாபு நாயுடு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதற்கு முன்னதாக,  நல்லாட்டூர் காலனி தும்பிகுளம், என்.என். கண்டிகை, லட்சுமாபரம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடி ஏற்றிவைத்து கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Tags : CM. G.K. Stalin ,Birthday ,Moon , Chief Minister M. K. Stalin's birthday welfare assistance: Chandran MLA provided
× RELATED மிதுனம்