×

ஜன.29-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும்: துரைமுருகன் அறிவிப்பு..!

சென்னை; திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Tags : Chief President B.C. G.K. ,Stalin ,Kanjagar ,GP , A meeting of DMK MPs will be held in the presence of Chief Minister M. K. Stalin on January 29: Duraimurugan's announcement..!
× RELATED திருக்கோயில் பணியாளர்களுக்கு...