×

இலங்கை தொதல்

செய்முறை:

முதலில் தேங்காயிலிருந்து நன்றாக பால் எடுத்து அதனுடன் கருப்பட்டி அல்லது நம் வீட்டில் உபயோகிக்கும் சர்க்கரை எதாவது ஒன்றை சுவைக்கேற்ப அதிகளவு பாலில் போட்டு அதனுடன் அரிசி மாவை சேர்த்து கட்டி வராமல் கைகளால் கலக்கி விடவும். அதன் பின் இந்த கலவைக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த உப்பு சர்க்கரையின் தரத்தை உயர்த்தி காட்ட தான் எனவே இரு சிட்டிகை அல்லது ஒரு சிட்டிகையே போதுமானது. இப்போது இந்த கலவையை அடுப்பில் வைத்து கைகளை எடுக்காமல் நன்றாக கரண்டியை வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

மெது மெதுவாக கடினமாகும். கூல் போல வந்ததும் இன்னும் நன்றாக கிளற வேண்டும். தேங்காய் பாலிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும், பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும் அது தான் இந்த தொதலுக்கு சுவையை கொடுக்கும் அதிகளவு எண்ணெய் பிரிந்தால் கரண்டி வைத்து எடுத்துவிடலாம். நன்றாக கிளறி எண்ணெய் பிரிந்து கட்டியான பாதத்தை அடைந்ததும் ஒரு ட்ரேயில் கொட்டி உலர்ந்த நட்ஸ் சேர்த்து தட்டி ஆறவைத்துவிட்டு, 5 முதல் 7 மணிநேரம் கழித்து வெட்டி எடுத்தால் நாவில் வைத்ததும் கரையும் அட்டகாசமான இலங்கை தொதல் தயார்.

Tags : Sri Lanka ,
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்