×

ஸ்பைரல் பொட்டேட்டோ

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன் கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஓமம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சற்று தளர்வாகக் கரைக்கவும். உருளைக்கிழங்கின் தோலைச் சீவி மெல்லிய மூங்கில் குச்சியில் குத்தவும் (குச்சியை எடுக்கக் கூடாது). கூர்மையான கத்தியால் நுனியிலிருந்து ஆரம்பித்து, கிழங்கின் கடைசி வரை சுழற்றிச் சுழற்றி வெட்டவும்.

(அதாவது ஒரு கையால் கத்தியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் குச்சியைச் சுழற்றினால் தானாக அதுவே வெட்டிக்கொள்ளும்). பிறகு மெதுவாகப் பிரித்து இழுத்துவிடவும். இப்போது பார்ப்பதற்கு ஸ்பிரிங் மாதிரி இருக்கும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி உருளைக்கிழங்கு ஸ்பிரிங்கை மைதா கலவையில் லேசாக முக்கி எடுத்துப்போட்டு பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Tags :
× RELATED கோடையில் குளிர்ந்த நீர் அருந்தலாமா?