×

நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு மேற்கொள்ளப்படும்: வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீலகிரி, முதுமலை வனப்பகுதியில் பரவிக் கிடக்கும் அந்நிய மரங்களை அகற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு மேற்கொள்ளப்படும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு வனப்பகுதியில் பரவிக் கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டில் பல வழக்கு விசாரணை செய்யப்பட்டது. அந்நிய மரங்களை அகற்றி விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.4.2 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது.

நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், 15 நாட்களில் மரங்களை அகற்றும் நடவடிக்கையை முடித்து 4 வாரங்களில் மரங்களை விற்பதற்கான டெண்டர் கேட்டு அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேற்கொள்ளப்படும் என வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மசினகுடி மற்றும் முதுமலை பகுதிகளில் உள்ள  அந்நிய மரங்களை அகற்றுவதற்காக தமிழக காகித நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான டெண்டரை இறுதி செய்து மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Nilgiris ,HC , Contempt of court if alien trees not removed at 191 places in Nilgiris: HC warns forest department
× RELATED நீலகிரி கூடலூர் அருகே புளியம்பாறை...