×

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10 ஆயிரம் பேர் தங்கும் விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன என திருமலை தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சூப்பாரெட்டி பேட்டியளித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2014-க்கு பின் தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்க கூடாது என முடிவு செய்யப்பட்டதாக சுப்பு ரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரம்மோற்சவம் , புரட்டாசி முடிந்து பல மாற்றங்களை புகுந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல மணிநேரம் பக்தர்கள் ஓரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு, ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம் என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை தரும் பக்தர்களுக்கு காலை நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இரவில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விஐபி தரிசனம் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதேபோல, திருமலைக்கு வந்த பிறகு பக்தர்கள் அரை பெற காத்திருப்பதும், அறை கிடைக்காமல் தவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், திருப்பதியிலேயே அறைகள் ஒதுக்கீடு செய்த ரசீது வழங்கி திருமலைக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


Tags : Tirumala ,Devasthanam , thirumala, devotees, crowd, increase, accommodation, accommodation, fund, allotment, devasthanam, announcement
× RELATED புரளிகளை நம்ப வேண்டாம் திருப்பதி...