×

தெலங்கானாவில் மீண்டும் பரபரப்பு மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவி கொலை: நாடகமாடிய கணவன் அதிரடி கைது

திருமலை: தெலங்கானாவில் மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவிக்கு கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ஊரக மண்டலத்தை சேர்ந்தவர் பிட்சம். மயக்க மருத்துவ நிபுணரின் உதவியாளர். பிட்சம் முதலில் தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருக்கு குழந்தை இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னை விட 20 வயது இளையவரான நவீனா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு  3 பேரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நவீனா கர்ப்பமடைந்ததால், இரு மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நவீனா 2வது முறையாக கர்ப்பமானார். கடந்த ஜூலை 30ம் தேதி தனது 2வது மனைவிக்கு  பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால், கம்மத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் காலை நவீனா மருத்துவமனையில் இறந்தார். இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது,  பிரசவம் நடைபெற்ற நாளில் நள்ளிரவு 2 மணியளவில் மனைவி நவீனாவிற்கு, பிட்சம்  ஊசி போட்டுகொன்றது தெரியவந்தது. ஏற்கனவே தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக அவரது மனைவி, கள்ளக்காதலன், டாக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோல் மயக்க ஊசி போட்டு 2வது மனைவியை கணவனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Telangana , Another sensation in Telangana after injecting anesthetic to kill 2nd wife: Dramatic husband arrested
× RELATED தெலுங்கானாவில் 1 ரூபாய்க்கு மருத்துவ...