×

மதுரை மாவட்ட பாஜ தலைவர் நீக்கம்

சென்னை: மதுரை மாவட்ட பாஜ தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை நகர், மாவட்ட தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Madurai District Baja , Madurai, BJP president, sacked
× RELATED ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும்...