×

திருவிழா நாட்கள், தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர்: திருவிழா நாட்கள், நீண்ட அரசு விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் கூடுதல் பஸ்களை இயக்கி பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை வரும் சூழ்நிலையில், தென்மாவட்டத்திற்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக பஸ்வசதிகளை செய்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500 முதல் 1000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்கள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. போக்குவரத்து துறை சார்பில் இணை போக்குவரத்து ஆணையர், துணைப்போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்டகுழு, கூடுதல் கட்டணங்கள் பெறுவதாக கூறப்படும் புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதுபோன்று புகார்கள் வந்தபோது கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : southern ,Minister ,Sivasangar , 1,000 special buses to southern districts due to festival days, consecutive holidays: Minister Sivashankar interview
× RELATED தெற்கு ரயில்வேயில் இந்த நிதி ஆண்டில் 9...