×

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu Government ,Independence Day , Gram Sabha meetings to be held at 11 am on Independence Day: Tamil Nadu govt orders collectors
× RELATED தமிழக அரசு சார்பில் கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளருக்கு நிதியுதவி