×

தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளர்.இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013, 2014, 2017, 2019ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பிள்ளைகளின் கல்வி தரம் காப்பதற்கான வாய்ப்பாக இது அமையும். தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags : Vijayakanth , Temporary teacher recruitment system should be scrapped: Vijayakanth report
× RELATED அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி...