×

மயிலாடும்பாறை-மல்லபுரம் மார்க்கத்தில் மலைச்சாலையில் தடுப்புச்சுவர் அவசியம்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வருசநாடு: வருசநாடு அருகே, மயிலாடும்பாறை-மல்லப்புரம் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.வருசநாடு பகுதியில் உள்ள மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலை தேனி, மதுரை மாவட்டங்களை இணைக்கும் சாலையாக திகழ்கிறது. இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் தினந்தோறும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்கள் செல்லும்போது இடதுபுறம், வலதுபுறம் மலைகளின் சாலையில் ஆங்காங்கே சருக்கு ஏற்படுகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இது சம்பந்தமாக வருசநாடு பகுதி பொதுமக்கள் வனத்துறை சார்பாக மலப்புரம் சாலையை சீரமைக்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரையும் சாலைகளை சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மயிலாடும்பாறை பகுதிகளில் விளைகின்ற காய்கறிகளை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு மலப்புரம் மலைச்சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரும், மதுரை மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Mayiladuthurai- ,Mallapuram road , Barricade required on Mayiladuthurai-Mallapuram road: Motorists insist
× RELATED ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு...