×

காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: 10ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் விஷம் குடிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள நாகசமுத்திரத்தை சேர்ந்தவர் சிவராமன் மகன் சிலம்பரசன் (22). பொக்லைன் ஆபரேட்டர். இவர் திப்பம்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோருக்கு தெரியாமல் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவி மாயமானதால் இதுபற்றி பெற்றோர் கிருஷ்ணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதனிடையே சிலம்பரசன் மாணவியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிலம்பரசனின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இருவரும் விஷம் குடித்து மயங்கினர். இருவரையும் உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் சிலம்பரசன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Parental opposition to romantic marriage: Adolescent drinking poison with 10th grade student
× RELATED அரியலூரரில் 10ம் வகுப்பு மாணவனை காதலித்த ஆசிரியை போக்சோவில் கைது!