×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 26, 27-ல் கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கரையோரம் பலத்த காற்று வீசும் என்றும் இன்றும், நாளையும் கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 25, 26-ல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கரையோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 35 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Puthuvai, Tamil Nadu ,Meteorological Center , Chance of moderate rain for the first 5 days from today in Puthuvai, Tamil Nadu due to atmospheric circulation; Meteorological Center Information
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...