×

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை; இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.! மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதியதாக  அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு, இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்து அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண்ணன், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது என்றும், இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய்எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாகவும்,  இருந்தாலும் கவனக் குறைவாக இருக்க கூடாது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Public Welfare , In Tamil Nadu, monkey pox has not been reported so far; However the public should be careful.! Interview with the Secretary of Public Welfare
× RELATED தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு...