சென்னை: கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமின் உத்தரவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரத்து செய்தார். கலை, கலாச்சார பிரிவில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்களின் நியமனங்களில் மாற்றமில்லை என அண்ணாமலை தெரிவித்தார். கட்சித் தலைவரின் ஒப்புதலின்றி தன்னிசையாக நிர்வாகிகளை மாற்றியது செல்லாது என கட்சித்தலைமை அறிவித்துள்ளது.