×

மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் சேவைகள் நேற்று (28.1.2022) முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.

Tags : Metro trains, corona, curfew
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா