×

பிரதமருடன் கலந்துரையாடல் பதிவு செய்வதற்கு அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி , ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி வருகின்றார். தேர்வுகள், தேர்வினால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த கலந்துரையாடல் நடந்து வருகின்றது. இந்நிலையில், 5வது ஆண்டாக பிரதமர் மோடியின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்வதற்காக கால அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான கெடு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பங்கேற்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் பல்வேறு தலைப்புக்களில் எழுத்துப் போட்டி நடத்தப்படும்.


Tags : Extension of opportunity to record discussion with the Prime Minister
× RELATED பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில்...