×

தடுப்பூசி செலுத்தியதால் 3ஆம் அலையில் பாதிப்புகள் குறைவு - ஒன்றிய சுகாதாரத்துறை செயலர்

டெல்லி: தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆசிய முழுவதுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 வாரங்களில் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலும் அதே உயர்வு உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் வேகம் கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த 6 மாநிலங்களுடன் குஜராத், ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான் என 10 மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிக்கூடங்களை திறக்க மராட்டிய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவு பள்ளிகளுக்கு அனுப்பு வைக்கப்படும் என்று அந்த மாநில கல்வி அமைச்சர் வர்ஷா ஏக்நாத் கேவாக் தெரிவித்துள்ளார். தொற்று பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மழலையர் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Union Health Secretary , corona
× RELATED முடிவுக்கு வந்துவிட்டது கொரோனா 3ம்...