×

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33.48 கோடியாக அதிகரிப்பு!!

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33.48 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 கோடியே 6 லட்சத்து 431 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 72 ஆயிரத்து 631 பேர் உயிரிழந்துள்ளனர்.

*அமெரிக்காவில் ஒரு நாளில் 463,633 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. ஒரேநாளில் 1,560 பேர் பலியாகி உள்ளனர்..

*இந்தியாவில் இதுவரை 37,896,011 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 277,740 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 487,226 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்..

Tags : சீனா, கொரோனா ,தொற்று
× RELATED அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து...