×

சென்னையில் ஊரடங்கை மீறியதாக 5,803 பேர் மீது வழக்கு பதிவு : அபராதமாக ₹11.7 லட்சம் வசூல்

சென்னை : சென்னை முழுவதும் கடந்த 31 மணி நேரம் கொரோனா முழு ஊரடங்கின் விதிகளை மீறியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 5,803 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதமாக ₹11.7 லட்சம் வசூலித்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 31 மணி நேரம் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் 312 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனை என 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை அதாவது 31 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கு நடைபெற்றது.  இதில் முழு ஊரடங்கில் கொரோனா விதிகளை மீறியதாக 103 பேர் மீது வழக்கு பதிவு செயய்ப்பட்டது. அதேபோல், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய நபர்களிடம் இருந்து 280 பைக்குகள் 16 ஆட்டோக்கள், 11 இலகுரக வாகனம் என மொத்தம் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 5,469 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து அபராதமாக 10 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காத  நபர்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடம் இருந்து ₹13,500 பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அந்த வகையில் 31 மணி நேரம் தொடர் முழு ஊரடங்கில்  சென்னை மாநகரம் முழுவதும் மொத்தம் 5,803 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக 11 லட்சத்து 7 ஆயிரத்து 300 ரூபாய் மாநகர காவல் துறை வசூலித்துள்ளது.


Tags : Chennai , Chennai police, Penalty Corona lockdown
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...