×

நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

பொன்னேரி: பொன்னேரியில் நரிக்குறவர் காலனியில் உள்ள 125 குடும்பங்களுக்கு, பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை.சந்திரசேகர், நிவாரண பொருட்களை  வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், பொன்னேரி நரிக்குறவர் இருளர் காலனிகள், இந்திராநகர் பகுதியில் வசிக்கும் 125 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரைசந்திரசேகர், நேற்று மேற்கண்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்களுக்கு பாய், தலையணை, பெட்ஷீட், அரிசி, எண்ணெய் உள்பட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார். அவருடன், பொன்னேரி ஆர்டிஓ செல்வம், விஏஓ சுப்பிரமணி செல்வராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் அமரன், கார்த்திகேயன், ஜான்.தியாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Relief assistance to bereaved families
× RELATED உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு...