×

கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்: கல்லூரி மாணவிகள் 54 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு மீண்டும் நோரோ வைரஸ் பரவியுள்ளது மக்களை கடும் பீதியடைய செய்துள்ளது. கேரளாவில் ஜிகல்லா நோரோ ஜிகா நிபா கொரோனா என அடுத்தடுத்து வைரஸ்கள் பரவி வருகின்றன. இந்தியாவிலேயே தற்ேபாது கேரளாவில் தான் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் உள்ளது. தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் நோரோ என்ற வைரஸ் நோய் கேரளாவில் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. அசுத்தமான குடிநீர் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது. ஏற்கனவே இந்த வைரசால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக இந்த வைரஸ் கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் தற்போது நோரோ வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி  உள்ளது.

திருச்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுக்கு இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியில் மொத்தம் 240 மாணவிகளும் 15 ஊழியர்களும் உள்ளனர். இதில் சிலருக்கு வயிற்றுபோக்கு மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் 54 மாணவிகள் மற்றும் 3 ஊழியர்களுக்கு நோரோ வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்ததும் திருச்சூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் ஊழியர்கள் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து மாணவிகள் ஊழியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா குறையாமல் அவதிப்படும் கேரள மக்களை நோரோ வைரஸ் பரவல் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Noro ,Kerala , Kerala, Norovirus
× RELATED ஆபாசமாக உடை அணிந்தால் பாலியல்...